பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை அரசாங்கம் அறிவிப்பு
1 year ago

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
தற்போது நாடாளுமன்றம் ஒன்று இல்லை. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது.
எனினும் இந்த விடயத்தில் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் போது உரிய தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





