இலங்கையில் கூட்டுறவுத்துறையின் நிதிமோசடி தொடர்பில் 700 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்.-- நடவடிக்கை இல்லை

1 year ago



இலங்கையில் கூட்டுறவுத் துறையில் கடந்த 20 வருடங்களாக பல இலட்சம் ரூபா நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாகவும் 700 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூட்டுறவுத்துறை, சமூகச் செயற்பாட்டாளரும், தொழிற்சங்கவாதியுமான டி. கே. கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக கூட்டுறவுத்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 20 வருடங்களாக கூட்டுறவுத்துறை தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் சுமார் 700 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பாக இதுவரை எவ்வித  நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

புதிய அரசு மக்களுக்கு நியாயம் வழங்கும் என பொது மக்கள் எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதால் தற்போதைய அரசாவது இதற்கு ஒரு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அண்மைய பதிவுகள்