இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு பருத்தித்துறைக்கு விஜயம்

1 year ago




இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக சீன தூதுவர் நேற்று மதியம் பருத்தித்துறை- சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு

சீன தூதுவர் பதிலளிக்கையில்,

'வடக்கு கிழக்கில் உள்ள சிறு கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை சீன அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி இலங்கையர்களாக வாழ்வதற்கு சீன அரசு தொடர்ந்து பாடுபடும்.- என்றார்.