ஜ.நாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்த இலங்கை.

1 year ago


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறி முறையையும் நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில், முதல் நாளிலேயே இலங்கை தொடர்பான

தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டன. அமர்வில் உரையாற்றிய ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக  ,“ஐ. நா. தீர்மானங்கள் இலங்கையின் சம்மதமின்றி அவை நிறைவேற்றப்பட்டமையால் அவற்றை இலங்கை நிராகரிக் கின்றது.

இலங்கை பல தசாப்தகால மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தினோம். இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றி னோம்.”, என்றும் கூறினார். 


அண்மைய பதிவுகள்