எம். ஏ. சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவிப்பு

1 year ago



எம். ஏ. சுமந்திரனின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் “சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரின்

சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக் கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்ன தைப்போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். விரைவில் - அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடக்கு மாகாண சபை தேர்தல் வரும். அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை. சுமந்திரன் பொறுமையாக இருந்தால், எல்லாம் தானாக அமையும்”, என்றார்.

அண்மைய பதிவுகள்