கனமழையால் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

1 year ago



தற்போது பெய்து வருகின்ற கனமழையால் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது 36 அடி 10.5 அங்குல அளவுகளை தாண்டி உள்ளதுடன் குளத்தின் 10.5 அங்குலம் வான் பாயந்து கொண்டிருப்பதால் குளத்தின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது.

எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாருகுளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளன.