மன்னாரில் கனமழையால் 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 பேர் பாதிப்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு

1 year ago



மன்னாரில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரத்து 898 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் முதல் தொடர்ந்து பெய்த மழையால் மன்னார் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 608 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 883 பேரும் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் 290 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 390 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மூன்று இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக உணவு மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு  தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்