டுபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1 year ago



டுபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கமைய தனது அணி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் நடிகர் அஜித்குமார் இந்தியத் தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் தயாராகி வந்த நிலையில், இறுதி நேரத்தில் அவர் பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார்.

எனினும் அஜித்குமாரின் அணி இதில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வெற்றிக்குத் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்