வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் தாழமுக்கமானது இன்று வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்.-- வளிமண்டலவியல் திணைக்களம் கூறியது
1 year ago

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இன்று வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்தியம் நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் நாட்டின் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில்150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





