யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (15) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

5 months ago

யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (15) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார்.

யாழ்ப்பாண இந்துக் கல்லூரியைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து இன்று சனிக்கிழமை (15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.