






மன்னார் ஓலைத்தொடுவாய் பிரதேசத்தில் கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கையை தடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலை தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடைமுறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்காக மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு நேற்று வருகை தந்தனர்.
இது தொடர்பில் அறிந்த அந்தக் கிராம மக்கள், பொது அமைப்புகள் என நூற்றுக் கணக்கானவர்கள் திரண்டு பாதையை மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்ற பொலிஸார் அவ்விடத்துக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகளை கடமையை செய்ய விடாது தடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்கள் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், அதிகாரிகள் திரும்பிச் சென்றதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





