ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்த சிறீதரன்

11 months ago


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். சிறீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் எம். பி. சிறீதரன், சமகால அரசியல் விடயங்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில்    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“இன்று முற்பகல் ஜனாதிபதி       அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனைச் சந்தித்தேன்.

இதன்போது புதிய ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்த சிறீதரன், சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்." - என்றுள்ளது.