இலங்கையில் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முற்றாக சேதம்.-- விவசாய பிரதி அமைச்சர் தகவல்

1 year ago



இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள்            சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன  தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிப படைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-அதேநேரம் சுமார் 3 ஆயிரத்து 900 ஏக்கருக்கும் அதிக விவசாய நிலப்பரப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

குறித்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டால், சுமார் 3 ஆயிரத்து 200 க்கும் அதிகமான விவசாயிகளும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

அத்துடன் சிறிய அளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்-என்றார்.



அண்மைய பதிவுகள்