இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார்

1 year ago



அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ட்ரம்பிற்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியும் டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி தனது வாழ்த்து செய்தியில், "உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெற்றிகரமான பதவிக் காலமாக அமைய வாழ்த்துக்கள்.

நெருங்கிய நண்பர் ட்ரம்ப் உடன் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்