தலையில் சி. சி. ரிவி கமரா பொருத்தியபடி பாகிஸ்தானில் இளம் பெண் ஒருவர் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1 year ago


தலையில் சி. சி. ரிவி கமரா பொருத்தியபடி பாகிஸ்தானில் இளம் பெண் ஒருவர் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான காணொலிகள் வெளியாகின்றன.

அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தலையில் சி. சி. ரிவி கமராவுடன் வீதியில் செல்கிறார். இது வித்தியாசமாக இருந்ததால் அந்தப் பெண்ணை ஒருவர் பேட்டி எடுக்கிறார்? தலையில் சி. சி. ரிவி கமரா ஏன்? என கேட்டதற்கு அந்தப் பெண் கூறுகையில், "நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக என் தந்தை இதை பொருத்தியுள் ளார்.

இது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனது தந்தை தான் எனது பாதுகாவலர். கராச்சியில் தாக்குதல், கொலை, பாலியல் வன்கொடுமை என பல சம்பவங்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது. ஆகையால் எனது பாதுகாப்புக்காக இந்த கமராவை என் தந்தை பொருத்தியுள்ளார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை" என்றார்.



அண்மைய பதிவுகள்