எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிடமாட்டேன் என்று முன்னாள் எம்.பி கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு

8 months ago



இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை தவிர்ப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டுக்கு நல்லது.இதுவொரு வரவேற்கத்தக்க விடயமும் கூட என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"வடக்கு - கிழக்கிலே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து    போட்டியிட்டோம்.

அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் என்கின்ற ரீதியில் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ்த் தேசியம் அழிந்து போகும் என்பதனை சிந்தித்து அனைவரும் செயல் பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்"- என்றும் கூறி னார்.