ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 12 நாடுகளுக்கு பயணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 கோடி ரூபா வரையில் செலவு செய்துள்ளார்.

1 year ago


ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 12 நாடுகளுக்கு பயணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 கோடி ரூபா வரையில் செலவு செய்துள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகத் தெரிய வந்துள்ளது. அவரது சீனப் பயணத்துக்கு விமான பயணச் சீட்டுக்கு மாத்திரம் 6.2 மில்லியன் ரூபா செலவு செய் யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரி ய போதும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தகவல்களை வழங்க மறுத்திருந்தது. தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொண்டதற்கு அமைவாக அந்தத் தகவல்களை வழங்க ஆணைக்குழு பணித்திருந்தது.

அதற்கு அமைவாக இதுவரை 12 நாடுகளுக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டு, உணவு மற்றும் தங்குமிடத்துக்காக 184.957 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் செலவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மைய பதிவுகள்