அநுராதபுரத்தில் நிலநடுக்கம்!

1 year ago


அநுராதபுரம் - கந்தளாய்க்கு இடைப் பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இது 2.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. அநுராதபுரத்திலிருந்து கிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று புவிச்சரித வியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் கூறியுள்ளது.