வவுனியாவில் அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

1 year ago



அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் காணி விற்பனை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்தே சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.



அண்மைய பதிவுகள்