வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையில் கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்
1 year ago

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை - சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு வருகை தந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிக்கையிட்டனர்.
கமநல சேவை காப்புறுதிக் குழுவின் உத்தியோகத்தர்கள், சேருநுவர கமநலசேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு சென்று சேத நிலைமைகளை பார்வையிட்டு விவசாயிகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
தமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் வந்து பார்வையிடவில்லை. இப்போதுதான் வந்து பார்க்கின்றனர்.
தாம் இரண்டாவது தடவையாக விதைப்புச் செய்துள்ளதாகவும் அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





