இலங்கை வருவதற்கு அனுமதிகோரும் உலகநாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு அனுமதியளிப்பது குறித்து அரசு அவதானம்

1 year ago



இலங்கை வருவதற்கு அனுமதிகோரும் உலகநாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கு அமைவாக விசேட விதிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் வரும் உலகநாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தத் தடையை முந்தைய அரசாங்கம் விதித்திருந்தது.

உலகநாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்படக்கூடிய இராஜதந்திர நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்புக் குழுவை ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க நியமித்துள்ளார்.