தமிழ் அரசுக் கட்சியில் தனிமனித சர்வதிகாரம் மட்டும் ஒழிய ஜனநாயகம் இல்லை சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவிப்பு

1 year ago



தமிழ் அரசுக் கட்சியில் தனிமனித சர்வதிகாரம் மட்டும் இருக்கிறதே ஒழிய ஜனநாயகம் இல்லை என்று சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சியில் ஜனநாயகம் இல்லை தனி மனித சர்வாதிகாரம் நடக்கின்றது.

இவர்கள் தமிழ்த் தேசியத்தை அழித்து விட்டார்கள்.

தமிழ் அரசுக் கட்சியில் ஊழல் நடக்கிறது.

தமிழர்களின் பிரச்னைகளை நாம் ஒன்றாகக் கலந்துரையாடி தென்னிலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும்.

எனினும், நமது தமிழ் அரசியல் வாதிகள் தென்னிலங்கை அரசுக்கு எது சார்பாக இருக்கின்றதோ அதையே செய்கின்றனர்”, என்றார். 

அண்மைய பதிவுகள்