சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்

7 months ago



சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கி விட்டு அவர் கண்முன்னே மாணவியை துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட காதலர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கோட்டூர்புரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.