ஈரான் தலைநகர் தெஹ்ரான் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

1 year ago



ஈரான் தலைநகர் தெஹ்ரான் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தெஹ்ரானின் மேற்கு பகுதியில் 7 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்குள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதில் வழங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலைமையை அவதானித்து வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஈரான் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.

அண்மைய பதிவுகள்