
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானின் தெற்கு ஹஸ்பையா (Hasbaiyya) பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் கான் யூனிஸ் பகுதியில் சிறுவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜபாலியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சிவில் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட்டில் நேற்று மாத்திரம் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்த தாக்குதல்களில், ஹெஸ்பொல்லாவின் ரத்வான் (Radwan) படையின் தளபதி அப்பாஸ் அட்னான் மஸ்லம் (Abbas Adnan Maslam) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
