யாழ்.வடமராட்சி கற்கோவளம், பகுதியில் கணவன் மனைவி இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

1 year ago



யாழ்.வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் 54 வயதுடைய அவரது மனைவி மேரி ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். 


அண்மைய பதிவுகள்