யாழில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு

1 year ago

யாழ். குடாநாட்டில் கடலுணவுகளின் விலை அதிகரித்துள்ளதாக                 நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக கடற்தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

இதனால் சந்தையில் கடல் உணவுகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதுடன் அவற்றின் விலை  அதிகரித்துள் ளது. பெரிய மீன் ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாவாகவும், நண்டு 2 ஆயிரம், கணவாய் 2 ஆயிரத்து 400, இறால் 2 ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.