யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வு.

1 year ago


யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை பொறுப்புக்கள் தொடர்பான செயலமர்வு இன்று(24) யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் காணி எஸ்.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்றது.

ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய விசேட பயிற்சி வேலைத் திட்டம் இன்று வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கலந்துக்கொண்டுள்ளார்.

மற்றும் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மொஹமட் தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றுள்ளார்.

எல்லை நிர்ணயம்,சட்ட நிர்வாக ஒழுங்கு,வாக்களிப்பு உரிமை,தெற்கில் உள்ள போராட்டம்,வடக்கில் உள்ள போராட்டம் பற்றியும், விருப்பு வாக்கு தொடர்பாக விழிப்புணர்வு, பாராளுமன்றம்,ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணுவது ஒன்றா? என பல விடயங்கள் பற்றியும், ஊடகவியாளருக்கு தெளிவூட்டப்பட்டது.