இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம், 800 முதல் 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன

1 year ago



இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 800 முதல் 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறினார்.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.