யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

1 year ago



யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற் கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.