
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்ற பயனாளியான அங்கவீனமுற்ற போர் வீரருக்கு வெமிந்திர சங்கக்காரவின் அனுசரணையுடன் இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார முச்சக்கரவண்டி அங்கவீனமுற்ற படைவீரரின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கப் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் அனுசரணையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
